Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Sudharshini / 2016 ஜனவரி 30 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேல் சக்திவேல்
ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைபக்கப்பட வேண்டும், பழைய தேர்தல் முறைமை புதிதாக கொண்டுவரப்பட வேண்டும், இனப்பிரச்சனைக்கான அரசியல் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற 3 கோரிக்கைகளை முன்வைத்து இந்நாட்டு நாடாளுமன்றம் ஓர் அரசியல் சபையாக மாற்றப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துருணு சிரம சக்தி செயற்றிட்டத்தின் கீழ் 250,000 ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு – எருவில் கிராமத்திலுள்ள பொது நூலம் வெள்ளிக்கிழமை (29) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில், 'பாதிக்கப்பட்ட எம்மக்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும். நல்லாட்சி ஒன்று இந்த நாட்டிற்குத் தேவை, என்ற நோக்குகோடுதான் கடந்த காலத்திலிருந்த மிருகத்தனமான காட்டாட்சியை மாற்றியுள்ளோம். இந்நிலையில்தான் தற்போது எமது காணிகளில் சில பகுதிகள் விடுவிக்கப் பட்டுள்ளதோடு வடக்கு கிழக்கு மக்கள் பயமின்றி வீதிகளில் உலாவக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது.
வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு அவ்வாறு இணைக்கப்படுகின்ற வடகிழக்குப் பகுதிக்குள் முஸ்லிம் மக்களுக்கு ஒரு அலகு வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இனப்பிரச்னைத் தீர்வுக்காக 1985 ஆம் அண்டு திம்புவிலே தொடங்கிய பேச்சுவார்த்தை, இறுதிவரை முன்னேற்றம் எதுவும் இன்றி 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எமது ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னரும், தற்போதைய புதிய ஆட்சியிலே சமஷ்ட்டி தீர்வினை வேண்டி நிற்கின்றோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பதந்தம், போன்றன கிழித்தெறியப்பட்டன அவ்விடையங்களுக்கு மேலாக தற்போதைய ஆட்சியிலே இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து செயற்படும் இந்த நல்லாட்சியில் எமக்குரிய தீர்வு கிடைக்க வேண்டும். இல்லையேல் வேறு எக்காலத்திலும் எமக்குரிய தீர்வு கிடைக்க மாட்டாது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட இன்னல்கள் இடம்பெறாமலிருக்க வடக்கு கிழக்கு இணைக்கப்படல் வேண்டும், சமஸ்ட் ஆட்சி ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இந்த நாட்டில் பெரும்பான்மைச் சமூகம் மற்றும் சிறுபான்மைச் சமூகம் என்ற நிலமை இருக்கக் கூடாது. அந்த இணைந்த வடகிழக்கில் ஒரு முஸ்லிம் அலகு உருவாக்கப்பட வேண்டும் என்பதை எனது கட்சியான தமீழீழ விடுதலை இயக்கம் 1990ஆம் ஆண்டுகளில்; மறைந்த ஜனாதிபதி பிரேமதாசாவின் முன்னிலையில் தெரிவித்திருந்தது.
எனவே, இணைந்த வடகிழக்கிலே ஒரு முஸ்லிம் அலகைக் கொடுப்பதில் எந்தத்தவறும் இருக்கமாட்டாது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள நிருவாகக் கட்டமைப்பைப் போன்ற ஒரு தீர்வை நோக்கி நகரலாமா என்று ஆராய்வதற்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தற்போது ஐக்கிய இராச்சியத்திற்குச் சென்றுள்ளார் ' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago