2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீண்டகால தொற்றா நோய்கள் காரணமாக 70 சதவீத மரணங்கள் சம்பவிப்பு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 27 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
இலங்கையில் சம்பவிக்கும் மரணங்களில் 70 சதவீதமானவை நீண்டகால தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படும் அதேவேளை, 21 சதவீதமான மரணங்கள் குறுகியகால தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படுவதாக மட்டக்களப்பு பிரந்திய சுகாதார வைத்தியப் பிரிவின் தொற்றாநோய் தொடர்பான வைத்தியர் எஸ்.நவலோஜிதன் தெரிவித்தார்.
 
தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரத்தையொட்டி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் அங்கு இன்று புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இலங்கையில் இறப்பு வீதத்தில் 09 சதவீதம் மாத்திரமே தொற்றும் நோய்கள் காரணமாக ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டிலுள்ள புற்றுநோயாளர்களில் 27 சதவீதமானவர்கள் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவுப் பழக்கவழக்கம், உடற்பயிற்சி இன்மை, போதைவஸ்துப் பாவனை, புகைத்தல் ஆகியற்றினால் தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன. ஒருவரின் உயரத்துக்கு ஏற்ற வகையில் நிறையைப்  பேணி வந்தால், நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X