2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நுண்போஷனைக் குறைபாட்டை கட்டுப்படுத்த மருந்து

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 28 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தென்னை மரங்களில் பரவலாகக் காணப்படும் நுண்போஷனைக் குறைபாட்டை கட்டுப்படுத்துவதற்கான சோடியம் டெட்ரா போறேட் என்ற இரசாயனப் பதார்த்தத்தை தென்னைப்பயிர்ச் செய்கைச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள முடியுமென அப்பிராந்திய முகாமையாளர் திருமதி பிறேமினி ரவிராஜ் தெரிவித்தார்.

நோய்த் தாக்கத்துக்குட்பட்ட தென்னை மரத்துக்கு மாட்டெருவுடன் சோடியம் டெட்ரா போறேட்டை கலந்து படிப்படியாக பிரயோகிப்பதன் மூலம் முற்றாக கட்டுப்படுத்த முடியுமெனவும் அவர் கூறினார்.

பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் தென்னை பயிர்ச்செய்கைச் சபைகளின் பிராந்திய அலுவலக வெளிக்கள உத்தியோகஸ்தர்கள் இன்று வியாழக்கிழமை கள விஜயம் மேற்கொண்டனர். இந்த நோய்த் தாக்கம் பற்றி தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் கிரான் தெங்கு அபிவிருத்தி பிரிவில் நடைபெற்றது.

நுண்போஷனைக் குறைபாடு என்பது தென்னை மரங்கள் காய்க்காமையே ஆகும். கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்போஷனைக் குறைபாடு காரணமாக பல தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, கிராமப்புறங்களிலேயே இந்நோய்த் தாக்கம் அதிகளவில் உள்ளதாகவும் அவர் கூறினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X