2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நீதி கிடைக்காவிடில் முஸ்தீபு

Gavitha   / 2017 ஜனவரி 08 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

'கிழக்கு மாகாணத்த்திலிருந்து அதிபர் தரம் மூன்று பரீட்சையில் சித்திபெற்ற அதிபர்களுக்கு, பாடசாலை பிரித்துக்கொடுக்கப்படாவிடில், முஸ்தீபில் ஈடுபடுவோம்' என்று கிழக்கு மாகாண தரம் பெற்ற புதிய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்து, கிழக்கு மாகாண தரம் பெற்ற புதிய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் பே.திவாகரன் மற்றும் பொருளாளர் க.சந்திரகுமார் ஆகியோர், இது தொடர்பில் இன்று தெரிவிக்கையில்,

'கிழக்கு மாகாணத்திலிருந்து அதிபர் தரம் மூன்று பரீட்சையில் 327 பேர் சித்தி பெற்று அதிபர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ள இந்நிலையில், இதுவரையில் அவ்வதிபர்களுக்கான பாடசாலைகள் வழங்கப்படவில்லை. இந்த அதிபர்களுக்குரிய பாடசாலைகளை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு, வேண்டுகோள் விடுக்கின்றோம்' என்று கூறினார்.  

'அதிபர்களுக்கான உரிய பாடசாலைகளை, எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவில்லையாயின், அதற்கு அடுத்த நாள் 18ஆம் திகதி, திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வியமைச்சுக்கு முன்னால், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படும். கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட பின்னரும், தங்களுக்கு நீதி கிடைக்காவிடில், வழக்குத் தாக்கல் செய்து முஸ்தீபில் ஈடுபடுவோம்' என்று அவர்கள் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X