2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நிதியுதவி வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு வசதியற்றுக் காணப்படும் 22 வறிய குடும்பங்களுக்கு வீடமைத்துக்கொள்வதற்கான காசோலைகள், இன்றுசனிக்கிழமை (01) வழங்கி வைக்கப்பட்டன.

ஏறாவூர் நகர சபையில் இடம்பெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் காசோலைகளை வழங்கி வைத்தார்.

வீடமைப்புக்காக மூன்று கட்டங்களாக வழங்கப்படவிருக்கும் நிதியளிப்பில் முதற்கட்டமாக தலா 50 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகளே வழங்கி வைக்கப்பட்டன.

பயனாளிகள் எவ்வளவு விரைவாக வீடமைப்பு வேலைகளை ஆரம்பிக்கின்றார்களோ அவ்வளவு விரைவாக அடுத்த கட்டக் கொடுப்பனவான 60 ஆயிரம் ரூபாவும் 3ஆம் கட்டக் கொடுப்பனவான 40 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்படும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஐ.எல்.எம். அக்ரம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பயனாளிகள் உட்பட இன்னும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X