2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Niroshini   / 2015 நவம்பர் 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்   

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட பிராந்திய முகாமையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை(12) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டநீர் பாதுகாப்பு திட்டம் தொடர்பான சமர்ப்பனங்கள் துறைசார்ந்த நிபுணர்களால் முன்வைக்கப்படவுள்ளதோடு அரசாங்க அதிபரின் தலைமையிலான மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் பிரதானிகள் அடங்கிய நீர் பாதுகாப்புத்திட்ட செயலாற்றுகை குழுவொன்றும் அன்றையதினம் நியமிக்கப்படவுள்ளது.

இதன்போது, தேசியநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மேலதிக பொதுமுகாமையாளர், பிரதி பொதுமுகாமையாளர், உதவி பொதுமுகாமையாளர், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் மற்றும் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர் வழங்கல மற்றும் வடிகாலமைப்புச் சபையின் சமூகவியலாளர் எம்.எஸ்.எம்.சறூக் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X