Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கடந்த மூன்று தசாப்த காலமாக போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண விவசாயத்துறையை கட்டியெழுப்பும் வகையில், கிழக்கு மாகாண சபையினால் விசேட நீர்ப்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை ஞாயிற்றுக்கிழமை (27) தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'2008ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு வரை கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாணத்தில் வாழும் மூன்று சமூகங்களின் வரலாற்று ரீதியான நீர்ப்பாசன குளங்களை அடையாளங்கண்டு அவற்றை புனரமைத்துக் கொடுத்தோம்.
இதனால், மிக நீண்ட காலமாக விவசாயம் செய்ய முடியாமல் இருந்த பல ஆயிரக்கணக்கான விவசாயக் காணிகளில் விவசாயம் செய்யக் கூடிய நிலை ஏற்பட்டது' என்று அவர் அவர் கூறினார்.
'எதிர்வரும் 2016ஆம் ஆண்டில், கிழக்கு மாகாண நீர்ப்பாசன திணைக்களத்துக்கு 60 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிதியைக் கொண்டு, முழு கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு முடியாத நிலை உருவாகும். கூடுதலான நிதியை நீர்ப்பாசன திணைக்களத்துக்கு ஒதுக்குவதற்கான விசேட ஏற்பாடுகளை முன்னெடுக்கவேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், குச்சவெளி பிரதேச விவசாயிகள் தங்களின் நீர்ப்பாசன விடயங்களை மேற்கொள்வதற்காக நீண்ட தூரம் பிரயாணம் செய்து, திருமலை நகரில் உள்ள நீர்ப்பாசன காரியாலயத்துக்கு வரவேண்டிய நிலமை இருந்தன.
இதற்காக குச்ச வெளிப் பிரதேசத்தில் உப நீர்ப்பாசனக் காரியலயமும் மூதூர் பிரதேசத்தில் உப-நீர்ப்பாசன காரியாலயமும் அமைக்கப்பட்டு பல வருடங்களாக இயங்கி வருகின்றன. இதே போல் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், பாணம, லவுகல பிரதேச விவசாயிகள் தம்பிலுவில் அமைந்துள்ள நீர்ப்பாசன காரியாலயத்துக்கு நீண்ட தூரம் பிரயாணங்களை மேற்கொண்டு தங்களின் நீர்ப்பாசன தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இதனால் பொத்துவில் பிரதேசத்தில் உப-நீர்ப்பாசன காரியாலயம் அமைக்கப்பட்டு பல வருடங்களாக இயங்கி வருகின்றன' என்று அவர் இதன்போது குறிப்பிட்டார்.
'இப்பிரதேசங்களில் நிரந்தரமான நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயங்களை திறந்து வைப்பதற்கான அனுமதிகள் ஏற்கெனவே பெறப்பட்டன. இதுவரை இக்காரியாலயங்களை திறந்து வைக்கப்படாமல் உள்ளன. இதனையும் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago