Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஏப்ரல் 01 , மு.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஹைராத் வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியர் இடமாற்றியதை கண்டித்தும் நிரந்தர ஆங்கில ஆசிரியர் ஒருவரை நியமித்து தருமாரும் கோரி, பாடசாலை நுழைவாயிலை மூடி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள், நேற்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது விருப்பமில்லாத ஆங்கில பாட ஆசிரியரை இப்பாடசாலைக்கு நியமிக்க வேண்டாம், பொருத்தமான ஆசிரியர் நியமிக்கப்படும் வரை போராட்டம் தொடரும், அதிகாரிகளே அரசியலை பாடசாலைக்குள் புகுத்த வேண்டாம், நீதியாக செயற்படுங்கள், மட்டக்களப்பு மத்தி எமது பிள்ளைகளின் கல்வியை மழுங்கடிக்காதே, அளித்த வாக்குறுதியை நிறைவேற்று, ஆங்கில ஆசிரியரை உடனே நியமனம் செய் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடங்கள் கடந்த நிலையில், தற்போது ஆங்கில ஆசிரியர் நியமிக்கப்பட்டு, மூன்று நாட்களில் ஆசிரியர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதுடன், பாடசாலைக்கு தற்காலிகமாக ஆசிரியர் ஒருவரை நியமித்ததையும் கண்டித்தும் நிரந்தர ஆங்கில ஆசிரியரை நியமித்து எமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு பெற்றோர்கள் கேட்டுக் கொண்டனர்.
இங்கு வருகை தந்த மட்டக்களப்பு மத்தி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.அஷ்ரப் மற்றும் ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைட் ஆகியோர் பெற்றோருடனான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், இவ்விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.இஸ்ஸதீனுடன் தொடர்புகொண்டு நிலைமையை தெளிவுபடுத்தினர்.
அதன் பிற்பாடு மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆங்கில ஆசிரியரை நியமிப்பதாக கூறியதாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.அஷ்ரப் தெரிவித்தமையடுத்து, ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு பாடசாலை நுழைவாயில் திறக்கப்பட்டதுடன், பாடசாலையின் முதலாந்தவனை பரீட்சை இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .