2025 மே 12, திங்கட்கிழமை

நெல் கொள்வனவு தொடர்பாக பிரதமருக்கு அறிவிக்கப்படும்

Kogilavani   / 2016 பெப்ரவரி 12 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

'நெல் களஞ்சியப்படுத்தலுக்காக கடந்த வருடங்களில் 7 நெற் களஞ்சியசாலைகள் அமைக்கப்பட்ட போதும் அவை முறையாக பாவனைக்குட்படுத்தப்படவில்லை இருந்தாலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக நெல் கொள்வனவு தொடர்பாக பிரதமருக்கு அறிவிக்கப்படும்' என மட்டு. மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக்கூட்டம் நேற்று, மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், பெரும்போக அறுவடை நெல் விற்பனையில் விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் முறையிட்டுபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

'விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவதற்கு மத்திய வங்கி, வங்கிகளுக்கு நிதிகளை வழங்குகிறது, அதேநேரத்தில் வட்டி விகிதங்களில் குறிப்பிட்ட வீதத்தை மத்திய வங்கி செலுத்துகின்றது. இந்நிலையில் சில வங்கிகள் விவசாயிகளுக்கான கடன்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுவது குறைவாகக் காணப்படுகிறது.

நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவில் ஈடுபட வேண்டும். இது தொடர்பிலான விவசாயிகளது கோரிக்கைகளை பிரதமருக்கு அனுப்பி வைப்பதுடன் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என்றார்.

இதேவேளை, வங்கிகள் விவசாயக்கடன் வழங்குதல், விவசாயக் காப்புறுதி, விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத்திணைக்களம், கமநல அபிவிருத்தி, தேசிய உரச் செயலகம், விதை மற்றும் நடுகை பொருட்கள் அபிவிருத்தி, விதை அத்தாட்சிப்படுத்தல், கால்நடை உற்பத்தி, கடற்தொழில், தென்னைப் பயிர்ச்செய்கை, வனவளத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களது பிரச்சினைகள், கடந்த வருடச் செயற்பாடுகள் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட விவசாயப்பணிப்பாளர் ஆர்.சிவநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X