Suganthini Ratnam / 2016 ஜூன் 24 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தால் நல்லாட்சிப் பொறிமுறைகள் மற்றும் நிலைமாறு காலநீதி தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் வகையில் 'இலங்கை அரசால் முன்வைக்கப்படுகின்ற நிலைமாறு கால நீதியானது நல்லிணக்க பொறிமுறைகளுக்கமைய சிறுபான்மை இனங்களுக்கு கிடைக்கக்கூடியதாக அமையுமா? இல்லையா? என்ற தலைப்பில் விவாத அரங்குப் போட்டி நடத்தப்படவுள்ளது.
இந்த விவாதப் போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் அனைவரும் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ தங்களது பெயர், தொலைபேசி, மின்னஞ்சல் முகவரி அனைத்தையும் எமக்கு இம்மாத இறுதிக்குள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபாலிலோ அனுப்பிவைக்க முடியும்.
மின்னஞ்சல் முகவரி: viluthubatti@gmail.com,முகவரி: இல. 37, பிள்ளையார் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு.
தொலைபேசி இல: 0652222500
போட்டியின் விதிமுறைகள்-
1. வயதெல்லை 18 தொடக்கம் 30வரை
2. ஒரு குழுவில் 03 பேர் மாத்திரமே அமைய வேண்டும்.
3. ஒரு இளைஞர் அணியிலிருந்து ஒரு குழுவிற்கு மேல் போட்டியிட விரும்புவோர் தமது கிராமம் தவிர்ந்த ஏனைய குழுக்களுடன் போட்டியிடுவர்.
4. முதலாம் பரிசு மாத்திரமே வழங்கப்படும். அத்துடன் முதலாம் பரிசாக 25000.00 ரூபாய் பெறுமதியான செயற்றிட்டம் ஒன்று வழங்கப்படும்.
5. போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து இளைஞர், யுவதிகளும் தலைப்பு தொடர்பாக சிறந்த அறிவினை பெற்றிருப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையமானது அண்மைக்காலமாக நல்லாட்சிப் பொறிமுறைகள் மற்றும் நிலைமாறு காலநீதி தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வூட்டும் முக்கிய பங்கினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், எதிர்வரும் காலத்தில் இளைஞர்களின் பங்கேற்பினை அதிகரிக்கச் செய்யும் நோக்கில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இந்த விவாதப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்கால சூழலுக்கு தகுந்தாற்போல சில தலைப்புக்கள் தெரிவுசெய்யப்பட்டு அவற்றில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைப்பே இறுதியாக தெரிவு செய்யப்பட்டது. எனவே தாங்களும் இச்சந்தர்ப்பத்தினை நழுவவிடாது இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளர் ஆவதோடு விழுது அமைப்புடன் இணைந்து செயற்றிட்டம் ஒன்றினை மேற்கொள்ளும் வாய்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்கப்பட்டுள்ளது.
2 hours ago
23 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
23 Dec 2025