2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நிலையான தீர்வுக்காக பிரயத்தனம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

இந்த நாட்டில் தமிழர்களுக்கு நிலையானதொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை நோக்கிய வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கல்முனை எலிசபெத் முன்பள்ளி பரிசளிப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே,  அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசாங்கத்துக்கு எமது நல்லெண்ண சமிக்ஞையைக் காட்டிக் கொண்டிருக்கின்றோம். இந்நிலையில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை விரைவாகப் பெற்றுத்தந்தால், சமத்துவம் மற்றும்  சமாதானம் இந்த நாட்டில் நிலைநிறுத்தப்படும்' என்றார்.

'சமத்துவமான அரசியலை விரும்பிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இன்னும் நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த நாட்டை மாறி, மாறி ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. இதனைப் பெறுவதற்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன' என்றார்.

'கடந்த காலந்தில் எமது இனத்துக்கு ஏற்பட்ட  அழிவுகளும் அடக்கு முறைகளும் கல்முனைப் பிரதேசத்தை மாற்றியமைத்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் அரசியல் ரீதியான தலைமைத்துவம் இல்லை. அவ்வாறிருந்த தலைமைத்துவங்களை திட்டமிட்டு பேரினவாத அரசாங்கம் கூறுபோட்டு அழித்த வரலாறுகளே இருக்கின்றன' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X