Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 20 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கல்குடாக் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல் போன சகோதரர்கள் இருவரினதும் மற்றும் துக்கம் தாங்காது மரணமடைந்த பெற்றோரினதும் சடலங்கள் இன்று செவ்வாய்க்கிழமை கல்குடா இந்து பொது மையானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
பட்டியடிச்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் சதீஸ்குமார் (வயது 20), சண்முகம் சுரேஸ் (வயது 18) ஆகிய சகோதரர்கள் இருவரும் கடலில் நீராடியபோது நீரில் மூழ்கிக் காணாமல் போன நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இது இவ்வாறிருக்க கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, தங்களின் பிள்ளைகள் இருவர் நீரில் மூழ்கிக் காணாமல் போன சம்பவத்தை கேள்வியுற்ற அவர்களின் பெற்றோர், நேற்று திங்கட்கிழமை அதிகாலை துக்கம் தளாது மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிகை அலங்காரத் தொழிலாளியான வேலுப்பிள்ளை சண்;முகம் (வயது 54), அவரது மனைவியான கணபதிப்பிள்ளை யோகலட்சுமி (வயது 46) ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.

1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago