Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஜூலை 03 , பி.ப. 05:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏறாவூர் நகர சபை நிர்வாகத்தில் பல கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் வித்திட்ட ஏறாவூர் நகர சபைச் செயலாளரின் விவகாரம் உடனடி இடமாற்றத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஏறாவூரின் நகர சபைச் செயலாளராக சொற்ப காலம் கடமையாற்றி வந்த எம்.ஐ. பிர்னாஸ், கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக நேற்று (02) முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாரென, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபயகுணவர்தன எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
அந்தப் பணிப்புரையின்படி தான் இதுவரை நகர சபைச் செயலாளராகப் பதவி வகித்த ஆவணங்களையும் அது தொடர்பான இன்னபிற ஆஸ்திகளையும் ஏறாவூர் நகர சபையிலுள்ள சிரேஷ்ட பதவிநிலை அதிகாரியிடம் ஒப்படைக்கும்படியும் அதேநேரம், கல்முனை மாநகர சபையில் கடமைகளைப் பொறுப்பேற்றமை பற்றி தனக்கு அறிக்கையிடுமாறும் மாகாண பிரதம செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த இடமாற்றக் கடிதத்தின் பிரதிகள், மாகாண ஆளுநரின் செயலாளர், பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர், மாகாண பிரதிப் பிரதம செயலாளர், மாகாண உள்ளூராட்சித் திணைக்கள ஆணையளார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சித் திணைக்கள அலுவலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமது கொடுப்பனவுகள் வழங்கப்படாததைக் கண்டித்து, ஏறாவூர் நகர சபையின் அனைத்து சுகாதாரத் தொழிலாளர்கள், வேலையாட்கள், சாரதிகள் கடந்த 30.05.2018 அன்றும் இதேபோன்று கடந்த 26.05.2018 அன்றும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் நடத்தியிருந்தனர்.
34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago