Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 ஜூன் 04 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் புதிதாக கட்டடம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கு உரிய அனுமதியினையும்இ நடைமுறைகளையும் பின்பற்றி ஒரு சாரார் கட்டடம் ஒன்றினை நிர்மாணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த கட்டடம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்படுகின்றது என குறிப்பிட்டு அருகில் உள்ள நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தனது குழுவுடன் தொடர்ச்சியாக தடை ஏற்படுத்தி புகைப்படம் எடுத்து அச்சுறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(30) மாலை கட்டடம் அமைத்து வந்த தரப்பினரின் சார்பில் அங்கு வேலை செய்கின்ற 18 வயது மதிக்கத்தக்க முஹம்மட் நசார் முகமட் ஆதிக் என்ற இளைஞனே நகைக்கடை உரிமையாளர் குழவினரால் தாக்கப்பட்டிருக்கின்றார். இதனை அடுத்து குறித்த தாக்குதலில் காயமடைந்த அவ்விளைஞன் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் குறித்த தாக்குதலில் ஈடுபட்ட நகை கடை உரிமையாளர் என கூறப்படுபவரும் தானும் தாக்கப்பட்டதாக கூறி கல்முனை ஆதார வைத்தியசாலையின் 7 ஆவது விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இவரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லாத போதிலும் அவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் உறவினரான வைத்தியர் கடந்த கால காய நிலைமையை காட்டி கல்முனை தலைமையக பொலிஸாரின் விசாரணைகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் மே மாதம் (31) மாலை இளைஞனை தாக்கிய நகைக்கடைக்காரரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் நள்ளிரவில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வந்த இளைஞனையும் அவ்விடத்திற்கு சென்ற கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் அப்துல் ரசீட் முஹம்மது கலீல் பிணையில் செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் வழக்கு தாக்கல் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் கல்முனை தலைமையக பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago