2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நட்டஈட்டுக்காக ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

2014 -2015ஆம் ஆண்டு பெரும்போகச் செய்கையில்;; வெள்ளப் பாதிப்புக்குள்ளான வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட விவசாயிகளில் பெரும்பாலானவர்களுக்கு பெரும்போக மானிய உரக் காப்புறுதி மூலமான நட்டஈடு கிடைக்கவில்லையெனக் கூறி அக்கமநல கேந்திர நிலையத்துக்கு முன்பாக  இன்று புதன்கிழமை  விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்துக்குட்பட்ட  1,700 விவசாயிகள் மேற்படி நட்டஈட்டுக்கு  விண்ணப்பித்திருந்தபோதிலும், 146 பேருக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.  
இவ்விடயம் தொடர்பில் தெரிவித்த வாழைச்சேனை கமலநல கேந்திர நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.ஏ.றசீட், '932 பேருக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவு  02 கோடியே 47 இலட்சத்து 43,660 ரூபாய் சிலருக்கு  காசோலை மூலமாக வழங்கப்பட்டதுடன்,  சிலருக்கு வங்கிக்கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது' என்றார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் மேன்முறையீடு செய்யும்  பட்சத்தில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கமென்று காப்புறுதிச் சபையினால்  தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X