வா.கிருஸ்ணா / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர், ஜனாதிபதி ஆகியோருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமென, தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி தலைவர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இழுத்தடிப்புச் செய்வதற்காக, ஒன்றிணைந்த எதிரணியால் இவ்வாறான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகமும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்களைத் திசை திருப்புவதற்காகவும் இழுத்தடிப்பு செய்வதற்காகவுமே, இவ்வாறான பிரேரணை கொண்டுவரப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago