Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 08 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
தற்போது பதவியிலிருக்கும் அரசாங்கத்தின் காலத்தில், தமிழ் மக்களின் விடயத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டுள்ள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தற்போதைய ஆட்சியைப் பலப்படுத்த வேண்டியது, அனைவரது பொறுப்பாகும் எனவும் குறிப்பிட்டார்.
உலக குடியிருப்பு வாரத்தை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாண்டியடி திருப்பதி கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள, 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக நேற்று (07) கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “நல்லாட்சியிலே, 75 சதவீதமான தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்தகால ஆட்சியிலே இச்செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்றிருந்த போதிலும், இந்த ஆட்சியில், பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதனை நான் பாராட்டுகின்றேன்” எனத் தெரிவித்தார்.
கடந்த 3ஆம் திகதி, கனகர் கிராம மக்களின் காணி விடயம் தொடர்பாக, ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பயனாக, அவற்றை உடனடியாக மக்களுக்கு வழங்குமாறு அவர், மாவட்ட செயலாளரைப் பணித்துள்ளார் என்று குறிப்பிட்ட கோடீஸ்வரன் எம்.பி, இவ்வாறான செயற்பாடுகளையும் தான் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago