2025 மே 23, வெள்ளிக்கிழமை

நல்லிணக்க நேய செயலமர்வு

Editorial   / 2017 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சால் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான நல்லிணக்க நேய ஊடக செயலமர்வு, மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள பிரிஜ் விவ் ஹோட்டலில் எதிர்வரும் 28ஆம் திகதி காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தில் ஊடக பணி ஆகிய நல்லிணக்க நேய ஊடக வலையமைப்பை் கட்டியெழுப்பும் நோக்கில், இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள், செயலமர்வுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தெரிவுசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்கான கடிதம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வீ. சிவஞானசோதியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X