Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மதங்களின் ஊடாக சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில் மாபெரும் சர்வமத பாதயாத்திரை, மட்டக்களப்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
இந்த நல்லிணக்க பாதயாத்திரையை, இலங்கை எகட் ஹரிதாஸ் தலைமையகமும் மட்டக்களப்பு எகட் ஹரித்தஸ் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆரம்பமான இந்த பாதயாத்திரையானது, மட்டக்களப்பு மாநகரசபை மண்டபம் வரையில் நடைபெற்றது.
காலி, இரத்தினபுரி, அம்பறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து வருகைதந்த இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களின் மதத்தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் மதங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த பாதயாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு பாதயாத்திரை வந்தடைந்ததும் அங்கு மத நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago