2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நவகிரியில் 28,425 ஏக்கரில் பெரும்போகச் செய்கை

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 30 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, நவகிரிப் பிரிவில் இம்முறை 28,425 ஏக்கரில் பெரும்போகச் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
நவகிரிப்பிரிவு பெரும்போகச் செய்கைக்கான ஆரம்பக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை (29) போரதீவுப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது நவகிரி நீர்ப்பாசனத்தின் கீழ் 17,272 ஏக்கரிலும் சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் 5,594 ஏக்கரிலும் அம்பாறை நீர்ப்பாசனத்தின் கீழ் 5,559 ஏக்கரிலுமாக பெரும்போகச் செய்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்செய்கைக்கான விதைப்பு வேலை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 20ஆம் திகதி முடிக்கப்படும்.  காப்புறுதி செய்யும் திகதி நவம்பர் 20ஆம் திகதியாகும். கால்நடைகளை எதிர்வரும் 10ஆம் திகதி வெளியேற்றுதல் எனவும் இக்கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதனிடையே  இப்போகத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள இரண்டரை மாத நெல்லினங்களான பி.ஜி -350, பி.ஜி -750,  மூன்று மாத நெல்லினங்களான பி.ஜி -310, பி.ஜி -300 மற்றும் மூன்றரை மாத நெல்லினங்களான பி.ஜி -360, பி.ஜி -370 போன்ற நெல்லினங்களை விவசாயிகள்; விதைக்கலாம் எனவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X