2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

‘நாடு, தனி இனத்துக்கு சொந்தமானதல்ல’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 07 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த நாடு, தனி ஓர் இனத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் அனைத்து இனங்களுக்கும் இந்த நாடு சொந்தமானது எனவும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ராவய பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான விக்டர் ஐவன் தெரிவித்தார்.
தம்புள்ளை, கண்டளமயில் ​“தேசத்தை மீள் புனரமைப்போம்” எனும் பொருளில், நேற்று (06) நடைபெற்ற இன நல்லுறவு ஒன்றுகூடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “ஒரு சமூகம் மற்றைய சமூகத்தையும் சமயத்தையும் மதித்து அவர்களின் கலாசாரத்துக்கும் மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்.
“சக வாழ்வு என்ற சொல்லை நாம் தொலைத்து நிற்கின்றேனாம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வைக் கட்டியெழுப்ப சகவாழ்வே அவசியம்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X