Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஜனாதிபதியை தென்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்ற அதேவேளை,இனவேறுபாடுகளுக்கப்பால், எவ்வாறான விழுமியங்களைக் கொண்டவர் நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாக கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்கான கலந்துரையாடல் ' தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின்' பங்கேற்புச் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பவ்ரல் நிறுவனத்தின் தலைவர் றோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
திட்டமிடல் பங்கேற்புக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணைய அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. பவ்ரல் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற தேர்தலுக்கான திட்டமிடல் கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் தூய அரசியலுக்கான மார்ச் 12 எனும் இயக்கத்தின் பிரதிநிதிகள், சர்வமத சமாதான அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சுமார் 30 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் மாகாணப் பணிப்பாளர் ஏ. சொர்ணலிங்கம் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு இடம்பெறக் கூடிய தேர்தல்களுக்கான திட்டமிடல் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உள்வாங்கி நிகழ்வை நெறிப்படுத்தினார்.
பவ்ரல் (PAFFREL)நிறுவனத்தின் தலைவர் றோஹன ஹெட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களின் இணைய மாவட்ட இணைப்பாளர் எஸ்.பி பிரசன்யா, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்hளர் மஞ்சுள கஜநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவர் ஷிராணி தேவகுமார் உட்பட இன்னும் பல ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago
9 hours ago