2025 மே 10, சனிக்கிழமை

‘நாட்டின் பாதுகாப்புக் கருதி கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கவும்’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஓகஸ்ட் 20 , பி.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்த நாட்டிலுள்ள பயங்கரவாதத்தை முற்றாக நீக்குவதற்கு, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஆதரவு வழங்கிவேண்டுமென, முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதலில் அதிகமாகத் தமிழ் மக்களே கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை இந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதென்றும் தெரிவித்தார்.

மேலும், ஏப்ரல் 21 பங்கரவாதத் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்கும் பொருளாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் கோட்டாபயவை ஜனாதிபதியாக வேண்டுமென்றார்.

கோட்டாபய, யுத்தத்தை முன்னின்று முடித்தவர், யுத்த குற்றவாளி என பல்வேறு வியாக்கியானங்கள் கூறப்படுகின்றன. யுத்தம் நிறைவடைந்து ஒரு வருடத்தில், சீருடை தரித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியது. யுத்தத்தை நடத்திய இராணுவத் தளபதிக்கு வாக்களிக்க முடியுமானால் ஏன் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு வாக்களிக்க முடியாதெனவும் அவர் கேள்வியெழுப்பினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X