2025 மே 09, வெள்ளிக்கிழமை

‘நாட்டில் அதிகாரமில்லாத ஆட்சி நடக்கிறது’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் அரசியல் அதிகாரமில்லாத ஆட்சியே நடக்கின்றதெனத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், தற்போதுள்ள நாடாளுமன்றத்தைக் கொண்டுநடத்த எந்த ஜனாதிபதியாலும் முடியாதென்றார்.

அடுத்தடுத்து வரப்போகின்ற தேர்தல்கள்  தொடர்பாக, இன்று (10) அவர்  கருத்து வெளியிடுகையில், 19ஆவது அரசியல் அதிகாரத்தை அமுல்படுத்துவதாயின் புதிய நாடாளுமன்றம் ஏற்படுத்தப்படவேண்டுமென்றார்.

நாட்டில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசியல் அதிகாரம் இல்லாத நிலையில்தான் கடந்த ஒரு வருட காலம் நகர்ந்துகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  

இனி வருகின்ற ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சை மட்டும்தான் வைத்திருக்கலாம என எதிர்வு கூறிய அவர், 19ஆவது திருத்தத்துக்கு முதலுள்ள நிலைமையின்படி, ஜனாதிபதி ஒருவர் எத்தனையோ அமைச்சுகளை தன்வசம் வைத்திருக்கலாம் என்ற ஒரு நிலைமை இருந்து வந்ததாகவும் ஆனால் இனி அது முடியாதெனவும் கூறினார்.

அத்துடன், அடுத்து வருகின்ற நாடாளுமன்றமே 19ஆவது திருத்தத்தின்படி அதிக அதிகாரங்களைக் கொண்ட நாடாளுமன்றமாக இருக்குமென்றார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்கதல்கள் நடைபெறவுள்ளமையால் எல்லாத் தேர்தல்களிலும் தகுதியான வேட்பாளரை, மக்கள் தேரிவுசெய்ய வேண்டுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X