Mayu / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில், நான்கு கால்களுடன் கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீராவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முகம்மட் நஸீர் என்பவர், கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி 11 முட்டைகளைத் தனது வீட்டில் அடைகாக்க வைத்துள்ளார். இவ்வாறு அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நேற்று (21) செவ்வாய்க்கிழமை 9 கோழிக் குஞ்சுகள் பொரிந்துள்ளன.
அவ்வாறு பிறந்த குஞ்சுகளில் ஒன்று, நான்கு கால்களுடன் அபூர்வமாகக் காணப்படுவதைக் கண்டு உரிமையாளர் வியப்படைந்துள்ளார். கறுப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் கலந்த நிலையில் காணப்படும் இந்தக் கோழிக் குஞ்சு, மற்றைய குஞ்சுகளைப் போலவே மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.
தற்போது இந்த அழகிய மற்றும் அபூர்வமான கோழிக் குஞ்சினை அப்பகுதியைச் சேர்ந்த பலரும் மிகவும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .