Janu / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - ஏறாவூர் ஓட்டுப்பள்ளி குறுக்கு வீதியில் பழைய பாடசாலை ஒன்று அமைந்திருந்த காணியொன்றில் புதைக்கப்பட்ட நிலையில் நான்கு கைக்குண்டுகள் செவ்வாய்கிழமை (09) அன்று மீட்கப்பட்டுள்ளது.
ஆயுதங்கள் இருப்பதாக பொலன்னறுவை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஏறாவூர் நீதவான் நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த பகுதியில் பொலிஸார் , விசேட அதிரடி படையினர், இராணுவ புலனாய்வு பிரிவினர் இணைந்து ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே தலைமையில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது சுமார் ஐந்து அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த மூடியிடப்பட்ட வாளி ஒன்றினுள் இருந்து நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரின்பராஜா சபேஷ்

4 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
5 hours ago
7 hours ago
8 hours ago