2025 மே 08, வியாழக்கிழமை

நான்கு சிசுக்களை பிரசவித்த தாய்க்கு நிதியுதவு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஒரே சூலில் 4 சிசுக்களைப் பிரசவித்த தாய்க்கு, தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன், சிசுக்களின் பராமரிப்பிற்காக ஒரு இலட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கியுள்ளார்.

கல்குடா மீடியா போரம் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் மூலம் தாயிடம் இந்த நிதியுதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது.

புத்தளம், கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவின் ஹுசைனிய்யா புரத்தை சேர்ந்த 24 வயதான இளம் தாய் ஒருவர், கடந்த  மாதம் 27ஆம் திகதி ஓர் ஆண், மூன்று பெண் என நான்கு சிசுக்களை ஒரே சூலில் பிரசவித்திருந்தார்.

அக்குடும்பத்தின்  ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு, நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியம் உதவ முன்வந்து, முதல் கட்டமாக மேற்படி ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X