2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நிதிச் செலவினங்களை குறைக்குமாறு அறிவுறுத்தல்

Princiya Dixci   / 2022 மே 29 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கிழக்கு மாகாண சபையின் நிதிச் செலவினங்களை குறைக்குமாறு, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாண மக்களும் அதே பிரச்சினைக்குரிய நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், மாகாண சபைக்குச் சொந்தமான அனைத்து நிறுவனங்களும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் தமது நிதி ஒதுக்கீட்டை வழங்குவதுடன், அதனை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல், நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களை அச்சிடுதல், அத்தியாவசியமற்ற உத்தியோகபூர்வ போக்குவரத்து நடவடிக்கைகள், புதிய பொருட்களைf; கொள்வனவு செய்தல். முன்னர் திட்டமிட்டு மதிப்பிடப்பட்ட போதிலும், இதுவரை ஆரம்பிக்கப்படாத அத்தியாவசியமற்ற திட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு, ஆளுநர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .