Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
1990 ஆண்டு காலப் பகுதியில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் வைத்து, வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவு கோரல் நிகழ்வு, சித்தாண்டி முருகன் கோயில் முன்றலில், இன்று (23) நடைபெற்றது.
பிரதேசத்தின் சிவில் அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகள் ஆகியோர் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவாக ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன் மரநடுகையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சர்வமதப் பெரியார்களிடம் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரையும் ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர்.
1990 ஆண்டு காலப் பகுதிகளில் இடம்பெற்ற கொடுரமான யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி கோவில் நலன்புரி முகாமில் தஞ்சமடைந்தனர்.
அவ்வேளையில் ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில், திடிர் சுற்றி வளைப்புகளை மேற்கொண்ட இலங்கை இராணுவத்தினர், முகாமில் தஞ்சம் புகுந்த இளைஞர்கள், மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள், பெண்கள் உள்ளிட்ட 99 பேரை கைதுசெய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் முக்கியமான இராணுவ முகமாகக் கருதப்பட்ட முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு காணமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago