2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

‘நியமனங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை’

Editorial   / 2019 மார்ச் 07 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எப்.முபாரக்

முகாமைத்துவ உதவியாளர் நியமனங்கள் தொடர்பில், இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் முகாமைத்துவ உதவியாளர் போட்டிப் பரீட்சையில் சித்திபெற்றுள்ளபோதிலும் இதுவரை தமக்கு நியமனங்கள் கிடைக்காதவர்கள், தமது பிரச்சினைகள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து எடுத்துக் கூறினர்.

இச்சந்திப்பு, திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்தில், நேற்று முன்தினம் (05) இடம்பெற்றது.

பரீட்சையிலும் நேர்முக தெரிவிலும் தோற்றி தாம் சித்தி பெற்றிருந்தும் இதுவரை தமக்கு நியமனம் கிடைக்கவில்லை எனவும் இது தொடர்பாக கவனம் செலுத்தி, தங்களது நியமனத்தை மிக விரைவில் பெற்றுத்தருமாறும், ஆளுநரிடம் அவரகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நியமனங்களின் தடைகள் குறித்து ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், இக்குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்ததுடன், மிக விரைவில் இப்பிரச்சினையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன்  கலந்துரையாடிய பின்னர் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும், அன்மையில் வெளியான வர்த்தமானி மற்றும் சட்ட நடவடிக்கை தொடர்பில் தங்களுக்கு ஏதாவது பாதகங்கள் காணப்படுமாயின் அது தொடர்பாகவும் கவனம் செலுத்தி கிழக்கு மாகாணத்தில் மொழித் தொடர்பாடலினூடாக பொது மக்களுக்கு இலகுவாக சேவைகளை வழங்கும் வகையிலேயே இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .