2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

நீண்டகாலமாக மீன்களை திருடியவர்கள் கைது

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

  காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனைக் கடலில்  நீண்டகாலமாக  மீன்களை திருடிவந்த  இருவரை  காத்தான்குடிப்பொலிஸார்  கைது செய்ததுடன் திருடப்பட்ட 100 கிலோவுக்கு   மீன்களையும்   நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த   பொலிஸார்,   காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்களுக்கு சொந்தமான மீன் பிடி படகுகளில் கடந்த பல வருடங்களாக   மீன்கள் திருடப்பட்டு வந்துள்ள முறைப்பாடு கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

மீன் வலைகள் வெட்டப்பட்டும் படகுகளில் காணப்படும் மீன்கள் திருடப்பட்டும் வந்த நிலையில்  நேற்றுக் காலை, கடலில் வைத்து காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில் இருந்த மீன்கள் திருடப்பட்டு அங்கிருந்து வாகனமொன்றில் மீன்கள் கடத்தப்பட்டு மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மீன்வாடி ஒன்றுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள போது, மீனவர்கள் காத்தான்குடி பொலிசாருக்கு  அறிவித்ததுடன்   குறித்த மீன் வாடிக்குச் சென்ற போது,  திருடப்பட்ட மீன்களையும்  கடத்திய வாகனத்தையும் காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X