2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நீரிழிவு தின விழிப்புணர்வு

எம்.எம்.அஹமட் அனாம்   / 2017 நவம்பர் 16 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு ஊர்வலமொன்று, நேற்று (15)  இடம்பெற்றது.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் எப்.பி.மதன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி, வைத்தியசாலையில் இருந்து ஆரம்பமாகி, கொழும்பு - ஓட்டமாவடி பிரதான வீதி, வாழைச்சேனை ஹைராத் வீதி, வாழைச்சேனை ஜும்ஆ பள்ளிவாயல் வீதி, வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியாகச் சென்று, மீண்டும் வைத்தியசாலையைச் சென்றடைந்தது.

இவ்விழிப்புணர்வு பேரணியில் வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை இந்துக்கல்லூரி மற்றும் ஓட்டமாவடி மத்திய கல்லூரி மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பொதுமக்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் மற்றும் நோயை குணப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பான வீதி நாடகம் வைத்தியசாலை உத்தியோகத்தர்களால் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .