Princiya Dixci / 2021 மார்ச் 30 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
நுண்கடன் திட்டத்தை இல்லாமல் செய்து, பெண்களை பாதுகாக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தி, தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் மறுமலர்ச்சி பெண்கள் அமைப்பு ஆகிய இணைந்து, மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை, இன்று (30) முன்னெடுத்தன.
“நுண்கடன் அரக்கர்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில், செங்கலடி-பதுளை வீதியில், கித்துள் சந்தியில் அமைதியான முறையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“நுண்கடனில் இருந்து பெண்களை பாதுகாப்போம், “நுண்கடனை தடுத்து, பெண்களை பாதுகாக்க ஜனாதிபதியே நடவடிக்கையெடுங்கள்”, “கடனில் இருந்து விடுபட்டு எங்களையும் மனிதர்களாக வாழவிடு”, “வறுமையின் கோரப்பிடியில் வாழும் மக்களுக்கான நீதியை நிலைநாட்டு”, “நாட்டில் நுண்கடன் செயற்பாடுகளை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
நுண்கடன் பெறும் நிறுவனங்களின் செயற்பாடுகளால் நாட்டில் பல பெண்கள் தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தனியார் நுண்கடன் திட்டங்களை இல்லாமல் செய்து, அரச வங்கிகள் ஊடாக பெண்களுக்கான கடன்களை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற கோரிக்கை இங்கு முன்வைக்கப்பட்டது.
இவ்வாறான கவனயீர்ப்புப் போராட்டம் வட மாகாணத்திலும் நேற்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .