2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நுண்கலைத் துறைக்கு ஆட்சேர்ப்பு

Editorial   / 2018 ஜனவரி 09 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

கொள்கைத் திட்டமிடல் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கீழ் உள்ள, கண்டி வெல்வூட் நுண்கலைத் துறைக்குப் புதிய மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

குறித்த நுண்கலைத்துறையில் இசை, நடனம், சங்கீதம் போன்ற பாடத்துறைகள் கற்பிக்கப்படவிருக்கின்றமையால், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் அல்லது உயர்தரத்தில் சங்கீதம், நடனம், இசை போன்ற துறைகளில் கற்ற மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மட்டக்களப்பு, மண்முனை தென்மேற்கு பிரதேச  இளைஞர், யுவதிகள் தங்களது பெயர் விவரங்களை, மண்முனை தென்மேற்கு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அ.தயாசீலனிடம் வழங்குமாறு, இளைஞர்சேவை உத்தியோகத்தர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .