2025 மே 10, சனிக்கிழமை

நூரளை எம்.பி திலகராஜ் – பிள்ளையான் சந்திப்பு

வா.கிருஸ்ணா   / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரேலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கியஸ்தருமான ம.திலகராஜ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) நேற்று (14) சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திலகராஜ் எம்.பி, இலக்கியங்கள் ஊடாகப் பல தொடர்புகள் தனக்கு கிழக்கு மாகாணத்தில் இருப்பதாகவும் அண்மையில் தான் வாசித்த நூல்களில் சந்திரகாந்தனின் “வேட்கை” நூல் வித்தியாசமானத் தெரிந்ததாகத் தெரிவித்தார்.

அத்துடன், அவரை விடுதலைப் போராட்டக்காரராக, ஒரு முதலமைச்சராகப் பார்க்கின்ற தருணத்தில், அவரின் எழுத்தாளுமை அந்த நூல் மீதான ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியதாகவும் அந்தவகையில், மட்டக்களப்புக்கு வந்த இந்த நேரத்தில் அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X