Suganthini Ratnam / 2016 மே 12 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு, பாசிக்குடாப் பிரதேசத்தில்; சுற்றுலாத்துறையை விருத்தி செய்யும் நோக்கில் சுற்றுலாச் சேவை வழங்குனர்களுக்கான மூன்று நாள் கருத்தரங்கு, பாசிக்குடா அமெதீஸ் வீச் சுற்றுலா விடுதியில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியது.
இலங்கை சுற்றுலா அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இக்கருத்தரங்கில் சுற்றுலா அபிவிருத்தி சம்பந்தமான நியமங்கள், விதிமுறைகள், கோட்பாடுகள், சுற்றுலா விடுதி நடத்துவதற்கான தரத்தைப் பின்பற்றுதல், தங்களின் வியாபார ஸ்தாபனங்களைப் பதிவு செய்தல், சுற்றுலா விடுதிக்கான அனுமதி பெறுதல், அதனைப் புதுப்பித்தல் போன்றவை தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என ஏற்பாட்டாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து மூன்று நாட்களும் இந்தக் கருத்தரங்கில் பங்குபற்றும் சுற்றுலாச் சேவை வழங்குனர்களுக்கு சுற்றுலா வழிகாட்டலுக்கான இலங்கை சுற்றுலா அதிகார சபையால் அங்கிகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதில் இலங்கை சுற்றுலா அதிகார சபையின் சர்வதேச நிதியக் கூட்டுத்தாபனத்துக்கான சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் கிரஹம் ஹாரிஸ், சர்வதேச நிதியத்துக்கான அபிவிருத்தித் திட்ட அதிகாரி காஞ்சனா கயனி அபயவிக்ரம, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் சந்தன விஜயரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago