Administrator / 2016 பெப்ரவரி 27 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
'பாடசாலை சமுகம் கோரிக்கைகளை முன்வைக்கும் பட்சத்தில் உதவி செய்வதக்கு தயாராகவுள்ளோம். இலாபத்தில் ஒரு பகுதியை கல்வி அபிவிருத்திக்கு செலவிடுவதே எமது குறிக்கோள்' என செலான் வங்கியின் கிழக்கு பிராந்திய முகாமையாளர் சிவஞானம் முத்ததிஸ்ஸ தெரிவித்தார்.
திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் செலான் வங்கியின் பெஹகர நூலக செயற்றிட்டத்தின் கீழ் 84ஆவது நூலகம் நேற்று(26) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'கல்வி நடவடிக்கைகளின் அபிவிருத்திக்கு உதவ செலான் வங்கி எப்போதும் தயாராகவுள்ளது. பாடசாலை சமுகம் தேவைகளை முன்வைக்கும் போது, அவை பரிசீலிக்கப்பட்டு உதவி வழங்கப்படும். அதற்காக மாணவர்கள் வங்கயில் கணக்கொன்றை பேண வேண்டும் என்ற கட்டாயமில்லை.
100 நூலகங்கள் உருவாக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் இன்று 84ஆவது நூலகம் திறக்கப்படுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம். பாடசாலைகளில் அதிபர்களின் கோரிக்கைக்கமைவாக மிகுதியாகவுள்ள நூலகங்களை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அத்தோடு, மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். திறமையுள்ள மாணவர்களுக்கு வங்கயில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும். கடந்த மாதம் இடம்பெற்ற வங்கி உத்தியோகத்தர்களுக்கான தேர்வில் கல்வித்தகமை இன்மையால் திருக்கோவில் கல்வி வலயத்திலிருந்து எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் 'என குறிப்பிட்டார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago