2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பெண் கைதிகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகள்

Princiya Dixci   / 2016 மார்ச் 07 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள பெண் சிறைக் கைதிகள் 14 பேருக்கு, சர்வதேச பெண்கள் தினத்தன்று, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர்ப் பிரிவு, அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகளை வழங்கி வைக்கவுள்ளதாக ரி.எம்.வி.பி கட்சியின் மகளிர் அணித் தலைவி செல்வி மனோகர் தெரிவித்தார்.

படுக்கை விரிப்பு, துவாய், பற்தூரிகை, பற்பசை மற்றும் சவர்க்காரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இப்பொதியில் அடங்கியிருப்பதாக செல்வி மனோகர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெறும் வைபவத்தில் இந்த அத்தியாவசியப் பொருட்களடங்கிய பொதிகள், பெண் சிறைக்கைதிகளிடம் சர்வதேச மகளிர் தினத்தன்று கையளிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X