2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பெண்கள் நாற்றுமேடைத் திட்டம் அமுலாக்கம்

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 15 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

நாற்றுமேடைகள் அமைத்து, பெண்களை விவசாயத்தில் ஈடுபடுத்தும் 'பெண்கள் நாற்றுமேடைத் திட்டம்', ஏறாவூர் விவசாய பெரும்பாகப் பிரிவில் அமுலாக்கப்படுவதாக ஏறாவூர் நகர பெரும்பாக விவசாய போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

இதன் பிரகாரம், ஏறாவூர் நகர பெரும்பாக விவசாயப் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 10 பெண்களுக்கான விதை உள்ளீடுகள், இன்று வியாழக்கிழமை (15) விநியோகிக்கப்பட்டன.

ஏறாவூர் நகர விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா, பெரும்பாக உத்தியோகத்தர் ஐ.பதுர்தீன், ஏறாவூர் பெரும்பாக விவசாய போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் ஆகியோரும் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X