Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராகேணி மிச்நகர் கிராமத்திலுள்ள வீடொன்றில் பெண்ணொருவர் தனியாக இருந்தவேளையில் திங்கட்கிழமை (12) மாலை உட்புகுந்த முகமூடி நபர்கள் அப்பெண்ணைத் தாக்கி கட்டிவைத்துவிட்டு, சுமார் 40 பவுண் தங்கநகைகளையும் ஒருதொகைப் பணத்தையும் திருடிச்சென்றமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, வீட்டு உரிமையாளரான பரீனா மஹ்றூப் (வயது 37) என்பவரே தாக்குதலுக்குள்ளானார்.
தலையில் தாக்குதலுக்குள்ளான இப்பெண் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இத்திருட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
44 minute ago
2 hours ago