Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 26 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
தற்போது இந்த நாட்டில் நிலவுகின்ற அமைதியான சூழ்நிலையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும்; நிலையில், போதைப்பொருள் பாவனை பாரிய சவாலாக அமைந்துள்ளது எனத் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எஸ்.கே.பண்டார தெரிவித்தார்.
சவாலாகக் காணப்படும் போதைப் பாவனைக்கு இடமளிக்காது, அனைவரும் ஒன்றுசேர்ந்து போதை ஒழிப்புக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், பொலிஸார் முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக கிராம மட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உதவ முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில்; கிராம மட்ட சிவில் பாதுகாப்புக் குழு உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் இன்று (26) பொலிஸ் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'தற்போது ஆண்களைப் போன்று பெண்களும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.
இளைஞர், யுவதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி தங்களின் எதிர்காலத்தைச் சீரழிப்பதற்கு அனுமதிக்க முடியாது' என்றார்.
'மேலும், நீங்கள் பொலிஸாரிடம் அச்சம் அடையத் தேவையில்லை என்பதுடன், உங்களின் பிரச்சினைகளை நேரடியாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ எங்களுக்குத் தெரியப்படுத்தி அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்நிலையில், போதைப்பொருள் உட்பட அனைத்து விதமான குற்றச்செயல்களையும் ஒழிப்பதற்கு உங்களின் ஒத்துழைப்பும் எமக்குத் தேவைப்படுகின்றது' என்றார்.
12 minute ago
40 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
56 minute ago
1 hours ago