Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
களுவாஞ்சிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புதுக்குடியிருப்புக் கடலிலிருந்து மீட்கப்பட்ட விமானத்தின் சிதைவடைந்த பாகமானது மட்டக்களப்பு, கல்லடியிலுள்ள கடற்படை முகாமில் வைக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மட்டக்களப்பிலுள்ள கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த வியாழக்கிழமை மாலை புதுக்குடியிருப்புக் கடலிலிருந்து 07 கிலோமீற்றர் தொலைவில் விமானம் ஒன்றின் சிதைவடைந்த பாகம்; மிதப்பதாகக் கடற்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, டோராப் படகில் சென்ற கடற்படையினர் விமானத்தின் இறக்கையுடன் கூடிய பின் பாகத்தை மீட்டனர்.
இந்தப் பாகம்; ரஷய நாட்டின்; போர் விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்பதுடன், இது சுமார் 09 அடி நீளம் உடையது எனவும் அவர் கூறினார்.

25 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
3 hours ago