2025 மே 08, வியாழக்கிழமை

பேத்தாழையில் நடமாடும் சேவை

Niroshini   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொதுமக்களின் நலன் கருதி சட்ட ஆவணங்கள் தொடர்பான நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

இதன்போது, பொதுமக்களுக்கு நீண்டகாலமாக பெற்றுக் கொள்ளமுடியாமல் இருந்த ஆள் அடையாள அட்டை,பிறப்பு,இறப்பு பதிவு பத்திரங்கள்,வெளிநாட்டு கடவுச் சீட்டு தொடர்பான பொலிஸ் முறைப்பாட்டு பிரதி மற்றும் இலவச நிழற் பிரதி சேவைகள் போன்றன இடம்பெற்றன.

மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் க.நடராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.தினேஸ் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

இதில்,கிராமிய அபிவிருத்தி திட்ட முகாமையாளர் வ.ரமேஸ்ஆனந்தன் மற்றும் எஸ்கோ நிறுவணத்தின் திட்ட முகாமையாளர் எஸ்.சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X