2025 மே 08, வியாழக்கிழமை

பொதுநூலக நிர்மாணத்தை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு நகரில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள பொதுநூலகத்தின் நிர்மாணப்பணிகளை பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவத்தையும் வரலாற்றையும் உள்ளடக்கியதாகவும்  பொதுமக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியினால் இந்த பொதுநூலகம் நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

250 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பொதுநூலக நிர்மாணப்பணிகள் 60 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்; விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இதற்கான  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எம்.உதயகுமாரிடம் கேட்டபோது, 'பொதுநூலக நிர்மாணப்பணிகளை  பூர்த்திசெய்வதற்கு இன்னும் 110 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக இந்தியாவிடமும் உதவி கோரியதாகவும் ஆனால், இதற்கான தகுந்த பதில் கிடைக்கவில்லை' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X