2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Niroshini   / 2016 மே 21 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளுடன் ஒருவர் இன்று (21) காலை 11.30 மணியளவில் வாழைச்சேனை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய சிறுவர்கள் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பதிகாரி ஏ.அமீர் அலி தலைமையில் சென்ற குழுவினர் பிறைந்துரைச்சேனை அஸ்கர் பாடசாலை வீதியில் வைத்து குறித்த சந்தேக நபரை கைது செய்ததுடன் மாத்திரைகளையும் மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தத முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரிடம் இருந்து TRAMADOL மாத்திரைகள் 50, NEUROUAN மாத்திரைகள் - 880, TRAMOJET – 1100 மாத்திரைகள் பணம் ரூ. 3400  என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த நபர் பிறைந்துரைச்னை முஹம்மதியா வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X