2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போதை மாத்திரைகளுடன் நபர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
 
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பிரதேசத்தில் வைத்து போதை மாத்திரைகளுடன் நபரொருவர், இன்று (19) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்தார்.

கல்முனையிலிருந்து ஓட்டமாவடிக்கு  குறித்த நபர், போதை மாத்திரைகளுடன் வருகின்றார் என்று பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து, சந்தேகநபர் பயணம் செய்த  செய்த பஸ்ஸை, கிரான் சந்தியில் வைத்துப் பரிசோதனை செய்த போதே, சந்தேகநபரிடம் இருந்து 800 போதை மாத்திரைகளும் கஞ்சா 100 மில்லிகிராமும் கைப்பற்றப்பட்டதுடன், குறித்த சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X