Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜனவரி 04 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்தை புதிய இடமொன்றில் அமைப்பதற்கு 07 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அப்பீடாதிபதி, வைத்தியர் கே.ரி.சுந்தரேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, அரசடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப் பீடத்தில் மருத்துவப் பகுதிக்கான புதிய மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு, அங்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
புதிய கல்வி ஆண்டுக்காக 59 மருத்துவபீட மாணவர்கள் உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசடிப்பகுதியிலுள்ள கட்டடங்கள் தற்காலிகக் கட்டடங்களாகும். இந்நிலையில், பிள்ளையாரடிப் பகுதியில் 50 ஏக்கரைக் கொண்ட காணியில் மருத்துவபீடமொன்றை அமைப்பதற்கான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு மாணவர்கள் விடுதிகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துபீடத்தை அமைப்பதற்கு குவைத் அரசாங்கம் நான்கு பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளது' என்றார்.
'பகிடிவதை இல்லாதொரு பீடத்தை உருவாக்குவதற்கு நாம் விரும்புகின்றோம். எனவே, இப்பீடத்தில் பகிடிவதையில் ஈடுபடுவோர் தொடர்பில் சரியான ஆதாரம் கிடைக்குமிடத்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய விஞ்ஞான பராமரிப்புப்பீடம் பல சிரமங்களுக்கு மத்தியில் வளர்ச்சி கண்டுள்ளது' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago