2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போதைவஸ்துக்கு எதிராக அறிவூட்ட தீர்மானம்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேசத்தில் போதைவஸ்த்துக்கு எதிரான தொடர்ச்சியான அறிவூட்டலை மேற்கொள்வதென காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை தீர்மானித்துள்ளது.

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை மண்டபத்தில்  புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற, ஜம் இய்யத்துல் உலமா சபையின் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது போதைவஸ்த்து பாவனையை கட்டுப்படுத்தல் மற்றும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு வேலைத்திட்டம், வீதி விபத்துக்களை தடுப்பதற்கான அறிவூட்டல் வேலைத்திட்டம், சமூக ஒழுக்கம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.

இதன் இறுதியில் போதைவஸ்த்துக்கு எதிரான தொடர்ச்சியான அறிவூட்டலை மேற்கொள்வதெனவும் இதற்காக பாரிய மாநாடு ஒன்றை நடாத்துவது எனவும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறும் ஜும்மா தொழுகையின் பின்னர் இது தொடர்பான விழிப்புணர்வை மேற்கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X