2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாதசாரிக் கடவையில் விபத்து: ஒருவர் பலி

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 24 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, tbNty; rf;jpNty;

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையில் நேற்று (23) இரவு 08.53க்கு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர், மாங்காட்டை சேர்ந்த சிவகுரு ரமேஸ் (36 வயது) என்பவர் என,  களுவாஞ்சிகுடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ், வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது மோதி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்ட நிலையில் உடனடியாக அவர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அங்கு அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இவ்விபத்து இடம்பெற்ற வீடியோ, கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்துக்கு  முன்னால் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸார், தனியார் பஸ் சாரதியைக் கைதுசெய்ததுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X