Niroshini / 2016 மே 17 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்டம் கச்சக்கொடிச் சுவாமி மலைக் கிராமத்தின் பிரதான வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பாலத்தின் வேலைகளைத் துரிதப்படுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழ், மாவட்ட விசேட அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் , தமிழ்த் தேசியக் கூட்டமைபினால் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்பட்டு, இப்பாலம் நிர்மாணக்கப்பட்டு வருகின்றது.
இப்பாலத்தின் புனரமைப்பு வேலைகளை திங்கட்கிழமை (16) நேரில் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, இவற்றை மிகவிரைவில் பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிக்குமாறு மண்முனை தென்மேற்கு பிரதேச சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
24 minute ago
44 minute ago